உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

Node.js வெளியீடுகள்

பராமரிப்பு LTS நிலையைக் கடந்த பதிப்புகளுக்கு எங்கள் OpenJS சூழல் நிலைத்தன்மை திட்டக் கூட்டாளர்கள் மூலம் வணிக ஆதரவு கிடைக்கும்

முக்கியமான Node.js பதிப்புகள் முதலில் ஆறு மாதங்களுக்கு Current நிலையில் இருக்கும்; இது லைப்ரரி உருவாக்குநர்களுக்கு புதிய பதிப்பிற்கான ஆதரவைச் சேர்க்க கால அவகாசம் அளிக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒற்றைப்படை எண்கள் கொண்ட பதிப்புகள் (9, 11 போன்றவை) அதிகாரப்பூர்வ ஆதரவை இழக்கின்றன. இரட்டைப்படை எண்கள் கொண்ட பதிப்புகள் (10, 12 போன்றவை) Active LTS நிலைக்கு மாற்றப்பட்டு, பொதுவான பயன்பாட்டிற்குத் தயாராகின்றன. LTS என்பது "long-term suppor" நிலையைக் குறிக்கிறது. இது பொதுவாக முக்கியமான பிழைகள் மொத்தம் 30 மாதங்களுக்குத் திருத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நிறுவனங்களின் நேரடிப் பயன்பாட்டில் உள்ள மென்பொருள்கள், Active LTS அல்லது Maintenance LTS பதிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வெளியீட்டு அட்டவணை

Releases

Node.js வெளியீட்டு அட்டவணைபற்றிய முழு விவரங்களும் GitHub இல் கிடைக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட பதிப்புக் கிளையின் சமீபத்திய வெளியீட்டைத் தேடுகிறீர்களா?

Node.jsகுறியீடு பெயர்முதலில் வெளியிடப்பட்டதுகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டதுநிலை
v25-Current
v24KryptonActive LTS
v23-End-of-life (EoL)
v22JodMaintenance LTS
v21-End-of-life (EoL)
v20IronMaintenance LTS
v19-End-of-life (EoL)
v18HydrogenEnd-of-life (EoL)
v17-End-of-life (EoL)
v16GalliumEnd-of-life (EoL)
v15-End-of-life (EoL)
v14FermiumEnd-of-life (EoL)
v13-End-of-life (EoL)
v12ErbiumEnd-of-life (EoL)
v11-End-of-life (EoL)
v10DubniumEnd-of-life (EoL)
v9-End-of-life (EoL)
v8CarbonEnd-of-life (EoL)
v7-End-of-life (EoL)
v6BoronEnd-of-life (EoL)
v5-End-of-life (EoL)
v4ArgonEnd-of-life (EoL)
v0-End-of-life (EoL)

அதிகாரப்பூர்வ மற்றும் சமூக நிறுவல் முறைகள்

Node.js இணையதளம், பயனர்கள் நேரடியாகத் தலையிடத் தேவையில்லாத பல நிறுவல் முறைகளை வழங்குகிறது. இதில் கட்டளை வரி இடைமுகங்கள் (CLIs), இயங்குதள(OS) பேக்கேஜ் மேனேஜர்கள் (எ.கா: brew), மற்றும் Node.js பதிப்பு மேலாளர்கள் (எ.கா: nvm) ஆகியவை அடங்கும்.

சமூகத்தின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தவும் ஊக்குவிக்கவும், Node.js திட்டம் தனது பதிவிறக்கப் பக்கத்தை மாற்றியமைத்துள்ளது. இதில் நிறுவல் முறைகள் "அதிகாரப்பூர்வமானவை" அல்லது "சமூகத்தினால் வழங்கப்படுபவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது பயனர்களுக்குக் கூடுதல் நெகிழ்வுத்தன்மையையும் தேர்வையும் வழங்குகிறது. தெளிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒவ்வொரு வகைக்கும் உரிய அளவுகோல்களை நாங்கள் வரையறுத்துள்ளோம்.

அதிகாரப்பூர்வ நிறுவல் முறைகள்

"அதிகாரப்பூர்வமானவை" என வகைப்படுத்தப்படும் நிறுவல் முறைகள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

தேவைகள் (அதிகாரப்பூர்வ நிறுவல் முறைகள்)
புதிய Node.js பதிப்புகள், அதிகாரப்பூர்வ வெளியீட்டுடன் அதே நேரத்தில் கிடைக்கப்பெற வேண்டும்.
இந்த நிறுவல் முறைகளைப் பராமரிப்பவர்கள், நேரடித் தொடர்பு வழிகள் உட்பட Node.js திட்டத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும்.
நிறுவல் முறையானது, Node.js திட்டத்தால் தொகுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பைனரிகளை மட்டுமே பதிவிறக்க வேண்டும்.
முன்கூட்டியே உருவாக்கப்பட்ட பைனரிகள் கிடைக்கும்போது, இந்த நிறுவல் முறைகள் மூலக் குறியீட்டிலிருந்து மென்பொருளை உருவாக்கக் கூடாது; மேலும், அவை அதிகாரப்பூர்வ பைனரிகளில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது.

சமூக நிறுவல் முறைகள்

சுய-சேவைப் பதிவிறக்கப் பக்கத்தில் (/download) இடம்பெறும் சமூக நிறுவல் முறைகள், பின்வரும் குறைந்தபட்ச அளவுகோல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:

  • பதிப்பு ஆதரவு: தற்போது அதிகாரப்பூர்வ ஆதரவில் உள்ள, காலாவதியாகாத (non-EOL) அனைத்து Node.js பதிப்புகளையும் ஆதரிக்க வேண்டும்.
  • இயங்குதள இணக்கத்தன்மை: அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படும் குறைந்தபட்சம் ஒரு இயங்குதளத்திலாவது (OS) இது செயல்பட வேண்டும்.
  • விரிவான இயங்குதள ஆதரவு: ஒரு இயங்குதளத்தின் குறிப்பிட்ட சில பதிப்புகளுக்கு மட்டும் என இந்த ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
    • உதாரணமாக, "Windows" உடன் இணக்கமானது எனக் கூறும் ஒரு நிறுவல் முறை, "Windows 10", "Windows 11" மற்றும் அவற்றின் அனைத்து பதிப்புகளிலும் (சர்வர் பதிப்புகள் உட்பட) செயல்பட வேண்டும்.
    • அதேபோல், "Linux" உடன் இணக்கமானது எனக் கூறும் ஒரு நிறுவல் முறை, அனைத்து முக்கிய லினக்ஸ் விநியோகங்களிலும் நிறுவக்கூடியதாக இருக்க வேண்டும்; ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டும் இருக்கக் கூடாது. இது apt அல்லது dnf போன்ற விநியோகம் சார்ந்த பேக்கேஜ் மேனேஜர்களை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.
  • இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள்: இது இலவசமாகவும், திறந்த மூல மென்பொருளாகவும் இருக்க வேண்டும். இது ஒரு வணிகத் தயாரிப்பாக விற்கப்படவோ அல்லது கட்டணச் சேவையாக இருக்கவோ கூடாது.